இலங்கை

யாழில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணம்

Published

on

யாழ்ப்பாணத்தில்(Jaffna) நான்கு நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்(22) உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம்(67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Exit mobile version