இலங்கை

கொழும்பை வந்தடைந்த சீனாவின் ஆர்க் பீஸ் கப்பல்

Published

on

ஆர்க் பீஸ் (Ark Peace) எனப்படும் சீன கடற்படையின் மருத்துவ கப்பல், இன்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலானது, இலங்கை மக்களுக்கு வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக நாளை முதல் 27ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை, மரபு ரீதியில் வரவேற்பு அளித்துள்ளது.

மேலும், ஆர்க் பீஸ் கப்பலின் ஊடான மருத்துவ சேவைகளில் இலங்கை கடற்படையின் மருத்துவத் துறையினரும் இணைந்து மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருத்துவ கிளினிக்களை வழங்கவுள்ளனர்.

அதேவேளை, இதன்போது இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவு, கடற்படை, கடல்சார் பீடம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தில் அதிகாரிகள் பயிற்சி உட்பட இலங்கை கடற்படை வீரர்களுக்கு கப்பலின் செயல்பாட்டு செயல்திறன் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

அத்துடன், குறித்த கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version