இலங்கை
அநுர அரசின் பெயரில் அடாவடி செய்த நபர்களினால் மன்னாரில் பதற்றம் !
மன்னார் (Mannar) நகரசபைக்கு சொந்தமான பிரதேச செயலக வீதியில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நகரசபையால் நாள் தோறும் அனுமதி வழங்கப்பட்டு அவற்றுக்கான பற்றுசீட்டும் வழங்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் வருட இறுதியில் குத்தகை அடிப்படையில் கடைகள் விற்பனை செய்வதற்காக 10-15 நாட்கள் குறித்த நாள் வியாபரிகளை வேறு இடங்களில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகரசபை கோரும்.
அவ்வாறு நகரசபை கோரும் போது நாள் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபரிகள் வேறு இடங்களில் வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருட இறுதி சந்தை நிறைவடைந்ததும் மீண்டும் அதே பகுதியில் நகரசபையின் அனுமதியுடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
ஆனால் இம்முறை அப்பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 30 க்கு மேற்பட்ட நாள் வியாபரிகள் நகர சபையின் கோரிக்கையை ஏற்று வேறு இடங்களுக்கு சென்ற போதிலும் தாங்களை காணொளி மூலம் பகிரங்கமாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என வெளிப்படுத்திய சிலர் அரசியல் தலையீட்டை உட்புகுதி குறித்த கடைகளில் இருந்து வெளியேற மறுத்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த விடயம் சட்ட விரோதம் என்ற அடிப்படையில் மன்னார் காவல்துறையினரின் உதவியுடன் குறித்த கடைகளை மன்னார் நகரசபை அகற்ற முற்றபட்ட வேளை குறிப்பிட்ட சில வியாபரிகள் காவல்துறையினர் மற்றும் நகரசபை செயளாலருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் தாங்கள் ஆளுனரிடம் பேசி விட்டதாகவும் வியாபர நிலையங்களை மூட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என தெரிவித்த நபர் சம்மந்தமே இல்லாமல் குறித்த விடயத்தில் தலையிட்டதுடன் 45 வியாபரிகள் தொழில் செய்த குறித்த பகுதியில் வெறுமனே தங்கள் கட்சி சார்பான 11 பேருக்கும் கடைகள் வழங்க ஆளுனரிடம் அனுமதி பெறப்பட்டு விட்டதாகவும் அது தொடர்பில் எழுத்து மூலம் ஆளுனர் தெரியப்படுத்துவார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 11 பேர் தவிர்ந்த ஏனைய வியாபரிகள் தாங்கள் என்ன செய்வது என குறித்த இணைப்பாளருடன் முரண்பட்ட நிலையில் அவர்களை மரியாதை குறைவாகவும் குறித்த நபர் பேசியுள்ளார்.