இலங்கை
அரச வைத்தியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அரசு
அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) அறிவித்துள்ளார்.
இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த அரச வைத்தியர்களின் ஓய்வு வயதும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரசு மருத்துவர்களின் அசல் ஓய்வு வயது 65 ஆக இருந்தது, ஆனால் முந்தைய அரசு 2022 இல் அதை 60 ஆகக் குறைத்துள்ளது என்று அவர் விளக்கினார்.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் ஓய்வுபெறும் வயதை 63 ஆக நீடிக்க தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.