இலங்கை

ஆட்டம் போட்ட பங்களாதேஷ் : எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த ஆர்கன் கிளர்ச்சி படை

Published

on

பங்களாதேஷில் (Bangladesh) இடைக்கால ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்குள்ள சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷில் எப்போது ஹசீனா (Sheikh Hasina) ஆட்சி கவிழ்ந்ததோ அப்போது முதலே பெரும் குழப்பமான ஒரு சூழலே நிலவி வருகிறது.

அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ள நிலையில், அங்குள்ள சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இஸ்கான் துறவியை கூட கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் பங்களாதேஷில் உள்ள சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மேற்கு மியான்மரின் ரக்கைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள்.

கடந்தாண்டு இந்த இராணுவ குழு மியான்மரில் பல பகுதிகளைக் கைப்பற்றினர். மியான்மரில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் இருக்கும் நிலையில், அவர்களைக் காட்டிலும் அதிக பகுதிகள் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் வசமே காணப்படுகிறது.

இந்நிலையில் பங்களாதேஷில் தெக்னாப் பிராந்தியத்தில் உள்ள சில பிராந்தியங்களை இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேஷின் பிரபல செயின் மார்டின் தீவு அருகே அமைந்துள்ள இந்த பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் முகாமும் இருக்கிறது.

இதனால் பங்களாதேஷிற்கு இது ரொம்பவே முக்கியமான ஒரு பகுதியாக இருக்கிறது. அது இப்போது ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version