இலங்கை

கெஹெலியவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

Published

on

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு கணக்குகளின் இருப்புத் தொகை சுமார் 200 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 53 (1) ஆவது பிரிவின்படி நேற்று (17) முதல் இடைநிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த இடைநீக்க உத்தரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மேலும் நீடிக்க ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

கடந்த காலங்களில், இந்த விசாரணைகள் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பலரின் சொத்துக்கள் பலவற்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தது.

இதேவேளை 2005 – 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டிருந்தார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 11 மில்லியன் ரூபா பெற்றுள்ளதுடன், ராஜித சேனாரத்னவுக்கு பத்து மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version