இலங்கை

தபேலா இசை மேதை ஷாகிர் ஹுசைன் காலமானார்

Published

on

பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் (Zakir Hussain) அமெரிக்காவில் காலமானார்.

அமெரிக்கா (USA) – சென்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த தகவலை ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா நேற்று தெரிவித்துள்ளார்.

பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சென்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சாகிர் ஹுசைன், அமெரிக்காவில் வசித்து வந்துள்ள நிலையில், அவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஒரு வாரமாக சாகிர் ஹுசைன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாகிர் ஹுசைன் சிகிச்சை பலனின்றி உயரிழிந்துள்ளார்.

Exit mobile version