இலங்கை
இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள அநுர
இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள அநுர
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க (anura kumara dissanayake)அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கு மூன்று நாள் விஜயமாக நேற்று(15) புதுடில்லியை சென்றடைந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க அங்கு பிரதமர் மோடி உட்பட பலருடன் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தினார்.
இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன்(narendra modi) இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தனது விஜயம் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என வலியுறுத்தினார்.
மேலும், பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.