Connect with us

இலங்கை

இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து அநுரவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

Published

on

5 14

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப் பிள்ளை மரியதாஸ் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து ஜனாதிபதி அநுர இந்திய பிரதமருடன் கலந்துரையாடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு செல்லவுள்ள நிலையில், நேற்று(10) யாழ். மாவட்ட கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சம்மேளனத் தலைவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவின் அத்துமீறிய இழுவை படகுகளினால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

நாம் பலமுறை இந்திய தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தும் இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் தொடர்ச்சியாக நமது கடற்பரப்புக்குள் நுழைந்து எமது வாழ்வாதாரங்களை அழித்து வருகின்றன.

இந்நிலையில், இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முதல் பயணமாக எதிர்வரும் வாரம் இந்தியா செல்ல உள்ளதாக அறிகிறோம்.

இந்திய இழுவைமடி படகுகளினால் எமது கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வருவதை இலங்கை ஜனாதிபதியும் கடற்றொழில் அமைச்சரும் நன்கு அறிவார்கள்.

மேலும், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக வலைகள் எடுத்து வரப்பட்ட நிலையில் கடற்றொழிலாளர்கள் வழங்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுக்கு தெரிவித்த நிலையிலும் இதுவரை கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் உரிய கவனம் எடுத்து தேங்கி கிடக்கும் வலைகளை கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே, எமது கடற்றொழிலாளர்களின் நீண்டகால பிரச்சினையான இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய பிரச்சினை இந்திய பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் பேசி எமது ஜனாதிபதி அநுர தீர்த்து வைப்பார் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜோதிடம்

17 11 17 11
ஜோதிடம்15 மணத்தியாலங்கள் ago

2025 இல் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு ஆண்டில் வேறுபட்டிருக்கும். இதில் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது பணவரவு...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.12.2024 குரோதி வருடம் கார்த்திகை 24, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 30.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 15, சனிக் கிழமை,...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 26.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 11, செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்3 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 23.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 8, சனிக் கிழமை,...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்3 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...