இலங்கை
யாழ். வட்டுக்கோட்டையில் 24 வயது இளைஞன் கைது
யாழில் (Jaffna) போத்தல் கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (09) இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியிலுள்ள 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.