இலங்கை
காதலியை திருமணம் செய்த நடிகர் காளிதாஸ் ஜெயராம்.. புகைப்படங்கள் இதோ..
காதலியை திருமணம் செய்த நடிகர் காளிதாஸ் ஜெயராம்.. புகைப்படங்கள் இதோ..
தென்னிந்திய சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் ஜெயம்ராம். குறிப்பாக நகைச்சுவை என்று வந்துவிட்டால், இவரை மிஞ்ச ஆளே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
இவருடைய மகன் காளிதாஸ் ஜெயராமும் தனது திரை வாழ்க்கையில் வளர்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகராக இருக்கும் காளிதாஸ் ஜெயராமுக்கு இன்று தனது அவரது காதலியுடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் கடந்த சில ஆண்டுகளாக தாரிணி என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலை பெற்றோரிடம் கூறி, சம்மதம் பெற்று கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் சென்னையில் விமர்சையாக நடைபெற்ற நிலையில், இன்று கேரளாவில் குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. காலை 7.15 மணிக்கு சுபமுஹூர்த்தத்தில் காளிதாஸ் – தாரிணி திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தை தொடர்ந்து மேரேஜ் ரிசப்ஷனை கேரளாவில் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.