இலங்கை

அமரன் படத்தின் மூலம் கோடிக்கணக்கில் கிடைத்த லாபம்.. முழு விவரம் இதோ

Published

on

அமரன் படத்தின் மூலம் கோடிக்கணக்கில் கிடைத்த லாபம்.. முழு விவரம் இதோ

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது.

சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மாபெரும் வெற்றியடைந்து, 2024ஆம் ஆண்டு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ள அமரன் படத்தின், மொத்த வசூல் மற்றும் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

அமரன் படத்தின் பட்ஜெட் – ரூ. 110 கோடி ஆகும். ரிலீஸுக்கு முன் அமரன் படம் – ரூ. 117 கோடி பிசினஸ் செய்யப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு மும்பே ரூ. 7 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் அமரன் ரூ. 361 கோடி வசூல் செய்துள்ளது. ரிலீஸுக்கு முன்பே இப்படம் ரூ. 117 கோடி பிசினஸ் செய்து இருந்தது.

ரிலீஸுக்கு பின் திரையரங்கம் மூலம் ராஜ்கமல் நிறுவனத்திற்கு ரூ. 105 கோடி வருவாய் வந்துள்ளது. மொத்தம் ரூ. 222 கோடி ஆகும். இதில் படத்தின் பட்ஜெட் ரூ. 110 கோடியை கழித்துவிட்டால், ரூ. 112 கோடி ராஜ்கமல் நிறுவனத்திற்கு லாபம் கிடைத்துள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version