இலங்கை
வடக்கு – கிழக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்: வெளியாகியுள்ள தகவல்
வடக்கு – கிழக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்: வெளியாகியுள்ள தகவல்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காவல் நிலைய கட்டளைத் தளபதி பதவிகளில் பல வருடங்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு புதிய இடமாற்றம் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் கொழும்பு மாவட்டத்தின் கீழ் காவல் நிலைய கட்டளைத் தளபதிகள் கடமையாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறை பிரிவுகளில் கடமையாற்றிய காவல்துறை பரிசோதகர்கள் மற்றும் பிரதான காவல்துறை பரிசோதகர்களும் நிலையத் தளபதி பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, தலைமை காவல்துறை பரிசோதகர்கள் மற்றும் காவல்துறை பரிசோதகர்களும் இடமாற்றங்களை பெறவுள்ளனர்.
இந்த நிலையில், காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்ற பின்னர் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 5 பிரதி காவல்றை மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் உதவி காவல்றை அத்தியட்சகர்கள்கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டதோடு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், காவல்துறை ஊடகப் பேச்சாளர், கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளர், களப் படைத் தலைமையகத்தின் பணிப்பாளர், காவல்துறை மருத்துவ சேவைகள் பிரிவின் பணிப்பாளர் உட்பட மூத்த விசாரணைகள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பல அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டது.