இலங்கை

2025 இல் உலகில் நடக்கப்போவது என்ன : திடுக்கிடும் தீர்க்கதரிசிகளின் கணிப்புக்கள்

Published

on

2025 இல் உலகில் நடக்கப்போவது என்ன : திடுக்கிடும் தீர்க்கதரிசிகளின் கணிப்புக்கள்

2025 ஆம் ஆண்டு இன்னும் சிறிது காலத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இது தொடர்பில் 16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸின் (Nostradamus) கருத்து கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும்.

இந்த மோதல் பரவலான அழிவுக்கு வழிவகுக்கும் அத்தோடு இது உலகையே உலுக்கக்கூடும்.

உலகம் ஒரு பொருளாதார சரிவைச் சந்திக்கும் அது பேரழிவை ஏற்படுத்தும் இது பரவலான அமைதியின்மை மற்றும் சமூக எழுச்சிக்கு வழிவகுக்கும்.

இந்த சரிவின் தாக்கம், மெக்சிகோ, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.

அங்கு பொருளாதார உறுதியற்ற தன்மை தற்போதுள்ள சவால்களை மேலும் மோசமாக்கும் அத்தோடு, பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாஸ்டர்டாமஸ் போன்றே பல்கேரியாவை சேர்ந்த ஆன்மீகவாதி பாபா வாங்காவும் கணிப்புக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version