இலங்கை
பதவிக்காலத்தில் சொத்துக் குவிப்பு: முன்னாள் அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு
பதவிக்காலத்தில் சொத்துக் குவிப்பு: முன்னாள் அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் (nimal sripala de silva) சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாக தெரிவித்து லஞ்சம், ஊழல் மற்றும் கழிவுகளுக்கு எதிரான குடியுரிமை அமைப்பினால் விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சராக இருந்த காலத்தில், தனது மனைவி, தோழி மற்றும் நண்பர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பெருமளவிலான சட்டவிரோத சொத்துக்களை குவித்துள்ளதாக உரிய முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா போக்குவரத்து, துறைமுகங்கள் உட்பட பல்வேறு அமைச்சு பதவிகளை கடந்த அரசாங்க காலத்தின்போது வகித்து வந்தவராவார்.
இதேவேளை வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.