இலங்கை

மாவீரர் நாள் நினைவேந்தல் : கைதான மொட்டுக் கட்சியின் செயலாளருக்கு பிணை

Published

on

மாவீரர் நாள் நினைவேந்தல் : கைதான மொட்டுக் கட்சியின் செயலாளருக்கு பிணை

வடக்கில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரேணுக பெரேராவுக்கு கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளரான ரேணுக பெரேரா, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (5) காலை கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்று (05) காலை அவரின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலமொன்றை பெற்றதன் பின்னரே இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP ) நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா (Renuka Perera) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (05) காலை குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ரேணுகா பெரேரா கொட்டிகாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கில் 244 நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கில் மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் காணொளிகளானது கடந்த காலங்களில் வெளிநாடுகளில் நடைபெற்ற வைபவங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version