இலங்கை
தேங்காயை அடுத்து வெங்காயத்தின் விலையும் அதிகரித்தது
தேங்காயை அடுத்து வெங்காயத்தின் விலையும் அதிகரித்தது
இலங்கையில் (sri lanka)அண்மைக்காலமாக தேங்காயின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதன்படி ஒரு கிலோ கிராம் இந்திய வெங்காயத்தின்(india onion) விலை 500 முதல் 550 ரூபாய் வரை இன்று (05) பிற்பகல் வரை அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பாகிஸ்தான் (pakistan)பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பெரிய வெங்காயத்தின் விலை கிலோ கிராம் ஒன்றுக்கு 400 முதல் 450 ரூபாய் வரை உள்ளதாகவும், வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இந்திய வெங்காயம் இருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை சில மாதங்களுக்கு முன், 40 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை விற்பனையான, ஒரு சிறிய தேங்காய், தற்போது 180 ரூபாயாக மாறி, மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளதாக, தேங்காய் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.