இலங்கை

நாளை இரவு வரை நாடாளுமன்றத்தை நடந்த தீர்மானம்

Published

on

நாடாளுமன்றத்தை நாளை இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தநிலை தொடர்பில் நாளை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது நாடாளுமன்ற வார சபை அமர்வு சற்று முன்னர் சபாநாயகர் அசோக ரங்வல (Ashoka Ranwala) தலைமையில் கூடியுள்ளது.

நாடாளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடியுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாகவும், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தில் நாடாளுமன்றம் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் 2025ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால நியமக் கணக்கு தொடர்பான பிரேரணையை டிசம்பர் மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவாதம் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.

இதேவேளை, 10வது நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவை அமைக்கும் நடவடிக்கையும் இன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றம் (parliament of sri lanka) நாளை (03) முதல் டிசம்பர் 6 ஆம் திகதி வரை கூடவுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால்(anura kumara dissanayake) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணைகள் நாளை (03) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பான விவாதம் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வு கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து தனது அரசின் கொள்கை விளக்க உரையை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க ஆற்றினார் . அதன்பின்னர் நாடாளுமன்றம் நாளைவரை(03.12) ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version