இலங்கை
இலங்கை வந்த விமானத்தில் பிரித்தானிய பிரஜை செய்த காரியம்
சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானமொன்றில் அவசர கதவை திறக்க முயற்சித்த பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சிட்னியில் இருந்து கட்டுநாயக்க வந்த பிறகு அமெரிக்க நோக்கி பயணிக்கவிருந்த விமானமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானத்தின் பாதுகாப்பு பெல்ட்களை பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவர், கட்டுநாயக்ககாவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு அளுத்கடே பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் 25,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேக நபர் குடிபோதையில் இருந்தமையால், அவசர கதவை திறக்க முயற்சித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சந்தேகநபரான பெவன் கிறிஸ்டி ஸ்காட் என்ற பிரித்தானிய பிரஜை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.