இலங்கை

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

Published

on

கடந்த சில நாட்களாகப் தொடர்ந்த வெள்ள நிலைமை தணிந்து வருகின்ற போதிலும், தொற்று அல்லாத நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதாரத் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், வெள்ளம் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் ஊற்று நீரை பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஊற்று அல்லது கிணற்று நீரை பயன்படுத்தும் போது பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவது அவசியம் எனவும் நன்கு கொதித்தாறிய நீரை பருக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வயிற்றுப்போக்கு, டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் இந்தக் காலத்தில் அதிகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்,தொற்று மற்றும் தொற்றாத நோய்களில் இருந்து சிறு குழந்தைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கொழும்பு, லேடி ரிஸ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் டிபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version