இலங்கை

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

Published

on

நாட்டில் எரிபொருள் விலை திருத்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒட்டோ டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,“ தற்போது நாம் பயன்படுத்தும் ஒட்டோ டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போது பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம்.

இந்த முறை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அது பேருந்து கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது.

கட்டண திருத்தத்துக்கான சூத்திரத்தின் அடிப்படையில் இந்த முறை பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது”என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version