இலங்கை

இலங்கையில் தமிழர்களின் இருப்புக்கான சர்வதேச தலையீடு குறித்து புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை..!

Published

on

இலங்கையில் தமிழர்களின் இருப்புக்கு சர்வதேச தலையீடு மிகவும் அவசியம் என மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவீரர் தினத்தையொட்டி பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இலண்டனில் (London) விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்று உயிர்நீத்த தமது உறவுகளை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்ததுடன், அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியும் செலுத்தினர்.

இதில் இலண்டனில் நடைபெற்ற நிகழ்வில் திரண்ட தமிழர்கள், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போர் தொடர்பில், நீதியான விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தியதுடன், தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி நிலைநாட்டப்படுவதன் தேவையையும் வலியுறுத்தினர்.

இங்கையில் தமிழ் மக்களின் இருப்பை தீர்மானிக்க சர்வதேச தலையீடு மிகவும் அவசியம் என்றும், சம காலத்தில் ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மனித உரிமைகளை நேசிக்கும் மேற்கத்திய நாடுகள் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version