இலங்கை
காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெங்கல்” சூறாவளியின் தாக்கம் காரணமாக சில பகுதிகளில் காற்றின் தரம் இன்று (30) மோசமடையக்கூடும் என்று மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) எச்சரித்துள்ளது.
நாள் முழுவதும் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 92 முதல் 120 வரை இருக்கலாம் என மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, குருநாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, புத்தளம், பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காற்றின் தரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கில் இருந்து காற்று மாசுக்கள் நுழைவதால் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்து, பாதகமான வானிலையின் விளைவாக ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக இது ஏற்படுகிறது.
இந்நிலையில், வளிமண்டலத்தில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தூசி துகள்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால், சுவாச நோய்கள் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதிக்கப்பட்டால் மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தப்படுட்டுள்ளார்கள்.