இலங்கை
சீரற்ற காலநிலையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள விவசாய நிலங்கள்!
கடும் மழையுடன் கூடிய காலநிலையால் சுமார் 375,000 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசிறி ஜசிங்க ஆராச்சி தெரிவித்துள்ளார்.
வெள்ள நிலைமை தொடர்பில் இன்று(30.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி வெள்ள நீர் வழிந்தோடிய பிறகு பயிர்களின் சேதம் குறித்து மதிப்பிடப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டமே அதிகளவிலான சேதத்தை சந்தித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெள்ளத்தினால் அழிவடைந்த 06 வகையான பயிர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.
அதன்படி, நெல், சோளம், வெங்காயம், சோயா, ஆகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது எனவும், முழுமையாக சேதமடைந்த விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.