இலங்கை
அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சரின் அறிவுறுத்தல்
அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சரின் அறிவுறுத்தல்
வெள்ளப் பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு அரச உத்தியோகத்தர்கள் கடினமாக பயணியாற்ற வேண்டும் என்று கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க(Upali Samarasinghe) தெரிவித்துள்ளார்.
வெள்ள நிலமை தொடர்பாக ஆராயும் கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று(28) இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வெள்ளப்பாதிப்பு விடயத்தில் வவுனியா மாவட்ட செயலகம் விரைவான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
அந்தவகையில் இன, மத, பேதம் என்ற விடயம் இங்கு இல்லை. அனைவரும் எங்களுடைய மக்கள். அரசியல் பேதமின்றி இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக உழைக்கவேண்டும்.
அரச உத்தியோகத்தர்கள் என்ற வகையில் நீங்கள் இந்த விடயத்தில் சற்று கடினமாக பணியாற்றவேண்டும்.
இதில் இருந்து விடுபடுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து நிதி உட்பட வேறு எவ்வாறான விடயங்கள் தேவையென்றாலும் அதில் தலையிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.