இலங்கை

வெள்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

Published

on

அம்பாறையில், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த நாகலிங்கம் சுரேஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளியான குறித்த நபர் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் இன்று (29.11.2024) திரவந்திய மேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதன் பின்னர் சடலமானது கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version