இலங்கை

அநுர அரசுக்கு எதிராக ஜோதிடர்களை நாடும் முன்னாள் அரசியல்வாதிகள்

Published

on

சமகால அநுர அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து முன்னாள் அரசியல்வாதிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதற்காக தமது ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலின் போது சரியான முறையில் செயற்பட்ட போதும், தாம் தோல்வி அடைந்துள்ளதாக பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் தாம் நாடாளுமன்றம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் பிரபல்யமாக இருந்து பல அரசியல்வாதிகள் ஜோதிடர்களின் இல்லங்களில் முகாமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

தற்போதைய அரசாங்கத்தை தோற்றக்கடிக்க வழிமுறைகள் உள்ளதா என்பது குறித்தும் பலர் பரிசிலித்து வருவதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version