இலங்கை

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

Published

on

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

அதாவது, பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை குறிப்பிட்ட திகதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பொதுத் தேர்தல் நவம்பர் 14, 2024 அன்று நடைபெற்றது. அதன் முடிவுகள் 15ஆம் திகதி வெளியானது.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள், குறித்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் உரிய வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், அந்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிக்கைகள் டிசம்பர் 6 அல்லது அதற்கு முன் அவர்கள் போட்டியிட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

“டிசம்பர் 6 அல்லது அதற்கு முன் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version