அரசியல்

ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர் ஜெயசூர்யா

Published

on

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய (Jayantha Jayasuriya) சட்டத்துறையில் 41 வருட சேவையை நிறைவு செய்து இம்மாதம் 30ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.

ஜயந்த ஜயசூரிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில், அவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது நாட்டின் சட்டமா அதிபராக பணியாற்றினார். ஜயந்த ஜயசூரிய 1983 ஆம் ஆண்டு அரசாங்க சட்டத்தரணியாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்துகொண்டார்.

ஓய்வுபெறவுள்ள பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை கௌரவிக்கும் சம்பிரதாய ரீதியிலான விசேட உச்ச நீதிமன்ற அமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி உச்ச நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

அவர் ஓய்வு பெற்ற பின்னர், பதில் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ(Murdu Fernando) புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ளார்.

Exit mobile version