இலங்கை

மன்னாரில் வெள்ள அனர்த்தம் : இடைத்தங்கல் முகாமிற்கு ரவிகரன் எம்.பி விஜயம்

Published

on

மன்னாரில் (Mannar) கனமழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் ஓலைத்தொடுவாய் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T.Raviharan) நேற்று (24) சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது, காற்றாலை திட்டத்தினால் வடிகால்கள் மூடப்பட்டதனாலேயே ஓலைத் தொடுவாய் பகுதியில் வெள்ளப் பாதிப்பு அதிகரித்திருப்பதாக மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

இவ்வாறு காற்றாலைத் திட்டத்தின்போது மூடப்பட வாய்க்கால்களை மறுசீரமைப்புச் செய்தால் வெள்ள அனர்த்தத்தைக் குறைக்க முடியும் எனவும் அதற்கு உரிய நவடிக்கை எடுக்குமாறு சுட்டிக்காட்டப்பட்டதுடன் நுளம்பு வலைக்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வாய்க்கால்களை மறுசீரமைப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்ததுடன், நுளம்புவலை தொடர்பில் மன்னார் மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து, இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கு நுளம்பு வலைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version