இலங்கை
சுஜீவவின் சொகுசு கார் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடமிருந்து (Sujeewa Senasinghe) கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனத்தை விடுவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID)உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி (Thanuja Lakmali) இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
100 மில்லியன் ரூபா பிணை அடிப்படையில் குறித்த சொகுசு வாகனத்தை மீள ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுஜீவ சேனசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த சொகுசு வாகனம் நீதிமன்ற உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டது.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுஜீவ சேனசிங்கவுக்கு சொந்தமான காரை விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
காரணிகளை பரிசீலித்த கோட்டை நீதவான், இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைக்கப்பெறாததால், சம்பவம் தொடர்பான வழக்கை இன்றைய தினம் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.