இலங்கை

யாழில் வாகன விபத்து: பெண்ணொருவர் பலி

Published

on

யாழில் வாகன விபத்து: பெண்ணொருவர் பலி

தென்பகுதியில் இருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம்(Jaffna) வந்தவர்களின் கார் மீது பட்டா ரக வாகனம் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(11.11.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது கம்பஹாவைச் சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடியே குசும்புஸ்பராணி (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுற்றுலாவிற்காக கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

இதன் போது தெல்லிப்பழை சந்திக்கும் தெள்ளிப்படை பொலிஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் (10) பட்டாராக வாகனமும் குறித்த காரும் மோதி விபத்து சம்பவித்தது.

இதன்போது படுகாயமடைந்த குறித்த பெண் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் அவர் உயிரிழந்துள்ளார்.

Exit mobile version