இலங்கை

வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் நேரம் அறிவிப்பு

Published

on

வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் நேரம் அறிவிப்பு

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க(R.M.A.L.Ratnayaka) தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தபால் வாக்குகளை எண்ணும் பணி 4.15 மணிக்கு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் 14ஆம் திகதி மாலை சுமார் 7.15 மணியளவில் வழக்கமான வாக்கு எண்ணிக்கையை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுவரை அதிகாரபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

வாக்கு எண்ணிக்கை 3 கட்டங்களாக நடைபெறும். அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் அதிக வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version