இலங்கை

உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள் குறித்து விசாரணை

Published

on

உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள் குறித்து விசாரணை

உரிமையாளர்கள் இல்லாத சுமார் 18 வாகனங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்கிய நிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம் உரிமையாளர்கள் இல்லாத விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, வாகனங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் ஏனைய தரப்புக்களின் ஒத்துழைப்புடன் இந்த வாகனங்கள் தொடர்பிலான விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Exit mobile version