இலங்கை
டிசம்பரில் வெளிவரவுள்ள நற்செய்தி: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
டிசம்பரில் வெளிவரவுள்ள நற்செய்தி: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
கடன் மறுசீரமைப்பு பணிகள் டிசெம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான கம்பஹாவில் நேற்று (11) இடம்பெற்ற இறுதி தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடன் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க ஸ்திரத்தன்மையை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், டிசம்பரில், அடுத்த நான்கு மாதங்களுக்கான துணை மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாடு புதிய பொருளாதார திசைக்கு கொண்டு செல்லப்படும்.
ஓய்வூதியர்களின் கொடுப்பனவு ஏற்கனவே ரூ.3000 உயர்த்தியுள்ளோம். இழப்பீடு பெறுவதற்கு வேறு குழு உள்ளதா என பரிசீலனை செய்யப்படுகிறது.
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் வருமானம் ஈட்டும்போது வரி நியாயமான விலக்குக்குக் கொண்டுவரப்படும் என்றார்.