இலங்கை
வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்..!
வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்..!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் (Department of Meteorology) உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் (Cyber attack ) நடத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இணையத்தளத்திற்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனை கூடிய விரைவில் மீளமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.