இலங்கை
இலங்கையில் கண்காணிப்புக்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிய வலையமைப்பு உறுப்பினர்கள்
இலங்கையில் கண்காணிப்புக்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிய வலையமைப்பு உறுப்பினர்கள்
சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு (ANFREL) நேற்று (11) முதல் இலங்கை முழுவதும் குறுகிய கால கண்காணிப்பாளர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
நாட்டில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு முன்னதாக பதின்மூன்று நீண்ட கால கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு உதவுவதற்காகவே தற்போது குறுகிய கால கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்தமாக சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு சார்பில் மொத்தமாக 30 கண்காணிப்பாளர்கள் களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
களத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாக, கண்காணிப்பாளர்கள் இலங்கையின் தேர்தல் முறை மற்றும் அரசியல் நிலப்பரப்பு பற்றி கொழும்பில் ஒரு நாள் விளக்கமளிப்பில் பங்கேற்றனர்.