இலங்கை

அநுர அரசாங்கத்திற்கு பாடம் எடுக்க தயாராகும் ரணில்!

Published

on

அநுர அரசாங்கத்திற்கு பாடம் எடுக்க தயாராகும் ரணில்!

எதிர்ப்பாளர்கள் தம்மை அழைக்கும் பெயர்களை விமர்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), அரசாங்கத்தின் நிதியை எவ்வாறு கையாள்வது என்று தெரியாவிட்டால் அநுர அரசாங்கத்தை தாத்தாவிடம் வந்து கேட்டு தெரிந்து கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

காலியில் நேற்றையதினம் (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, “அரசாங்கத்தில் இருப்பவர்கள் அரசாங்க நிதியை கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அரச ஊழியர்களின் சம்பளத்தை இரண்டு கட்டங்களாக அதிகரிக்க உதய செனவிரத்ன குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைபடுத்த வேண்டும்.

செலுத்தும் வரிக்கான வரம்பை ரூ.150,000 ஆக உயர்த்தி பின்னர் அதை மேலும் ரூ.200,000 ஆக உயர்த்துவதற்கான ஒப்பந்தத்துடன் அது முன்னேற வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலின் மிக முக்கியமான அம்சம் பொருளாதாரம், நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.

தற்போது அதனை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது குறித்து ஜனாதிபதி தெரிவிக்க வேண்டும், அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்படுமா என்பதையும் அவரே சொல்ல வேண்டும்.” என்றார்.

Exit mobile version