இலங்கை
முந்தைய ஆட்சியில் வெளிநாட்டு இராஜதந்திர பணிகளுக்கு சென்றவர்கள் திருப்பி அழைப்பு
முந்தைய ஆட்சியில் வெளிநாட்டு இராஜதந்திர பணிகளுக்கு சென்றவர்கள் திருப்பி அழைப்பு
முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அரசியல் தொடர்புகள் ஊடாக வெளிநாட்டு இராஜதந்திரப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் டிசம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) இன்று (06) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
”முந்தைய ஆட்சிக் காலத்தில் சில வெளிநாட்டு இராஜதந்திர பணிகளுக்காக தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு சேவைகளில் அனுபவம் பெற்றவர்கள் அல்ல, அவர்கள் அனைவரையும் அரசியல் நியமனங்கள் என்று வகைப்படுத்த முடியாது.
அவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் பிள்ளைகள் மற்றும் மனைவிகள் ஆகியோர் தூதுவர் பதவிக்கு கீழான பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அவர்களுக்கு டிசம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.