இலங்கை
கொலை முயற்சிகள் இடம்பெறலாம்: பாதுகாப்பு செயலாளருக்கு சந்திரிக்கா கடிதம்
கொலை முயற்சிகள் இடம்பெறலாம்: பாதுகாப்பு செயலாளருக்கு சந்திரிக்கா கடிதம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனவிரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கடிதத்தில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி, ஒக்டோபர் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தில் தனது பாதுகாப்புப் படையின் எண்ணிக்கையை 50 இல் இருந்து 30 ஆக குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 243 மற்றும் 200 மற்றும் 109 பேர் கொண்ட பாதுகாப்பு குழுக்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், அவருக்கு 30 பாதுகாவலர்களை மட்டும் வழங்குவது எந்த அளவுகோலின் படி முடிவு செய்யப்பட்டது என்பது அவருக்கு புதிராக உள்ளது.
அத்துடன், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.