இலங்கை
தமிழ் அதிகாரியின் பதவியை பறித்த அநுரவிற்கு சர்வதேசத்தில் கடும் எச்சரிக்கை
தமிழ் அதிகாரியின் பதவியை பறித்த அநுரவிற்கு சர்வதேசத்தில் கடும் எச்சரிக்கை
தேர்தல் காலங்களின் போது நியமனங்கள் வழங்கப்படக்கூடாது, புதிய திட்டங்கள் வகுக்கப்படக் கூடாது என டிரான்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா தேர்தல் ஆணைக்குழுவுக்கு (Election Commission) அறிவித்திருக்கின்றது.
இந்நிலையில், பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸுக்கு (Selvin Irenias) பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த பதவியை பொறுப்பேற்று சிறிது நேரத்திற்குள் அவரது பதவி இரத்துச் செய்யப்பட்டது.
ஆகவே, இந்த தேர்தல் விதிமீறல் குறித்து உடனடியாக கவனத்தில் எடுக்குமாறு சர்வதேச அமைப்பான டிரான்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா அறிவித்திருக்கின்றது.
இந்தநிலையில், குறித்த விவகாரமானது குறிப்பாக அநுர அரசாங்கத்தினுடைய தமிழர்கள் மீதான பாரபட்சத்தைக் காட்டுகின்றது.
அத்தோடு, சர்வதேசம் வரை மிக உன்னிப்பாக அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸ் (Selvin Irenias) தெரிவித்துள்ளார்.