இலங்கை

சுங்கத்திணைக்கள முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிப்பு

Published

on

சுங்கத்திணைக்கள முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிப்பு

இலங்கை சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 125 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றமைக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 125 மில்லியன் ரூபா அபராதம் விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version