இலங்கை

அநுர அரசில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாணயத்தாள்

Published

on

அநுர அரசில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாணயத்தாள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி நாணயத்தாள் தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டரெக பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் படத்தை பயன்படுத்தி போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களை இணையத்தில் வெளியிட்டதாக அவர் மீதான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிலியந்தலையில் வைத்து நேற்று பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பண மதிப்பு நீக்கம் தொடர்பாக அரசியல் அரங்கில் காரசாரமான விவாதம் எழுந்தது.

போலி நாணயத்தாள்
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான பணம் அச்சிட்டுள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள போதிலும், அந்த அறிக்கைகள் அடிப்படையற்றவை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் நிதியமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பமிடப்பட்ட நாணயத்தாள் ஒன்றை காட்டுமாறு அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version