இலங்கை

ரணிலுக்கு பதிலடி கொடுத்த தேசிய மக்கள் சக்தி

Published

on

அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாவிட்டால், நாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்தைப் போன்று விபத்துக்குள்ளாகும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கூற்றுக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) பதிலளித்துள்ளது.

பதுளையில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன, அனுபவமுள்ளவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று ரணில் கூறுகிறார்.

இந்தநிலையில் அனுபவம் என்ற வகையிலேயே அவர்களுக்கு நாடு கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 76 வருடங்களாக நாட்டை நொருக்கி திவாலாக்கியுள்ளனர்.

எனவே அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களுக்கு மக்கள் ஒருபோதும் அதிகாரம் கொடுக்க மாட்டார்கள் என்றும் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

மாறாக, மக்கள் நட்பு அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே மக்கள் வாக்களிப்பார்கள் என்று வித்தியாரத்ன குறிப்பிட்டுள்ளார்;.

முன்னதாக கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுபவம் வாய்ந்தவர்களை மக்கள் தெரிவு செய்யத் தவறினால் துன்ஹிந்த – பதுளை வீதியில் கவிழ்ந்த பேருந்தைப் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version