இலங்கை

விரிவான கூட்டு நடவடிக்கை: வாகன மோசடிகளை கண்டறிய களமிங்கும் பொலிஸார்!

Published

on

விரிவான கூட்டு நடவடிக்கை: வாகன மோசடிகளை கண்டறிய களமிங்கும் பொலிஸார்!

கடந்த அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகள் மற்றும் அரசு தொடர்பான உயரதிகாரிகள் பயன்படுத்திய பதிவு செய்யப்படாத வாகனங்களைக் கண்டறிய விரிவான கூட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ், சுங்கம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றின் கீழ் குறித்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறான வாகனங்கள் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக ஒருங்கமைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும், சட்டவிரோத உதிரிபாக இறக்குமதி போன்றவற்றை கண்டறிய இதன்முலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் முன்னாள் உயரதிகாரிகளின் வசம் இன்னும் இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வாகனங்களை ஒப்படைக்காமல் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்து விட்டு சென்றமை தொடர்பிலும் பல முறைபாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவல்களை நிராகரிக்கப் போவதில்லை எனவும், அரச வாகனங்கள் மற்றும் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் மறைத்தல் தொடர்பிலான எந்தவொரு தகவல்களையும் உடனடியாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version