இலங்கை
ஊடகங்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்க முயற்சிப்பதாக சஜித் குற்றச்சாட்டு
ஊடகங்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்க முயற்சிப்பதாக சஜித் குற்றச்சாட்டு
இலங்கையின் ஊடகங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்த கருத்துக்களுக்காக அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார்.
அத்துடன், ஊடக செய்திகளை கட்டுப்படுத்தும் முயற்சியை கைவிடுமாறு அவர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது ஊடக சுதந்திரம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றி பேசிய அநுரகுமார திசாநாயக்க, தற்போது ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்க முயற்சிப்பதாக பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி நாட்டின் ஊடகங்கள் ஜனாதிபதியிடமோ அல்லது எந்த அரசியல்வாதியிடமிருந்தும் ஆலோசனை பெறத் தேவையில்லை.
இந்தநிலையில், ஒரு ஜனநாயக நாட்டின் தூணாக இருக்கும் ஊடக சுதந்திரத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.