இலங்கை
அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பதவியை சுமந்திரன் பெறவுள்ளதாக தகவல்
அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பதவியை சுமந்திரன் பெறவுள்ளதாக தகவல்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன், இலங்கை தமிழரசு கட்சி இணைந்து செயற்படும் என, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அந்த அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு எம்.ஏ.சுமந்திரனுடன் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை அமுல்படுத்துதல், போர் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குதல், சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வருதல் போன்ற நிபந்தனைகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.
“குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் உயர் பதவிகளில் இருந்து உடனடியாக நீக்கம்” என்ற தலைப்பில் பொது மனு ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ரவி சேனவிரத்தை நீக்குமாறு இந்த பொது மனுவில் கோரப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய கடமையை செய்ய நாம் இன்று ஒன்று சேர்ந்துள்ளோம். ஜனாதிபதி பதவியேற்ற முதல் மாதத்திலேயே அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
எதிர்க்கட்சியில் அவர் எடுத்த நிலைப்பாடு பொய்யானது என நிரூபிக்கப்பட்டதால், சனல் 4, ஈஸ்டர் தாக்குதல் நிகழ்ச்சி குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை மறைக்க முயன்றார்.
மேலும் அவரது அரசியல் கூட்டாளிகள் இருவர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால், விசாரணைக் குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மூடிவிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.