இலங்கை
திருச்சி – இலங்கை இடையே கூடுதல் விமான சேவை ஆரம்பம்
திருச்சி – இலங்கை இடையே கூடுதல் விமான சேவை ஆரம்பம்
திருச்சி (Trichy) – இலங்கை (Sri Lanka) இடையே கூடுதல் விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபாய், சாா்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் இலங்கை தவிர ஏனைய நாடுகளுக்கு தினசரி 1 முதல் 4 சேவைகள் உள்ளன. ஆனால் இலங்கைக்கு விமானங்களை இயக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தினசரி 1 என்ற வகையில் வாரந்தோறும் 7 சேவைகளை மட்டுமே இயக்கி வந்துள்ளது.
அதன்படி வாரத்தில் செவ்வாய், புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு இலங்கையிலிருந்து வரும் விமானம் 10.10 இற்கு மீண்டும் இலங்கை செல்லும்.
இதேபோல திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3.05 மணிக்கு இலங்கையிலிருந்து வரும் விமானம் 4.10-க்கு புறப்பட்டு செல்கிறது.
இந்நிலையில் வியாழக்கிழமைகளில் காலையும் இலங்கைக்கு கூடுதல் விமானச் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக திருச்சியில் நேற்றுமுன்தினம் (31) நடந்த விழாவில் ஸ்ரீலங்கன் விமான நிறுவன திருச்சி நிலைய மேலாளா் அஜாஸ் உள்ளிட்டோர் கூடுதல் சேவையைத் ஆரம்பித்து வைத்துள்ளனர்.