இலங்கை
அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை! மகிந்த மற்றும் சந்திரிக்காவுக்காக குரல் கொடுக்கும் ரணில்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை புதிய அரசாங்கம் இரத்து செய்யக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமக்கு எந்தவித சலுகையும் தேவையில்லை எனவும், ஆனால் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசாங்க வீடுகள் மீளப் பெறப்படுகின்றன. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் அந்த வீட்டில் இல்லை.
ஆனால், எதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின்(Chandrika Kumaratunga) வீட்டை மீளப் பெறுகின்றீர்கள். அவருக்கு அந்த சலுகை வழங்கப்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) யுத்தத்தை முடித்து வைத்தவர். அவருக்கான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் மனிதாபிமானத்துடன் அவதானம் செலுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.