இலங்கை

கற்கோவளம் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது..!

Published

on

யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி, கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்கோவளம், வீரபத்திரர் கோவிலடியில் நேற்று முன்தினம் (30.10.2024) கணவன், மனைவி சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

53 வயதுடைய மாணிக்கம் சுப்பிரமணியம் மற்றும் 54 வயதுடைய அவரது மனைவி மேரி ஆகிய இருவருமே கொல்லப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் நேற்று முன்தினம் இரவும், மற்றொரு சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை வாக்குமூலம் பெறுவதற்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 2025 ம் ஆண்டுக்கான சலவைத் தொழில் ஒப்பந்தத்தை இம்முறை பெற்றதனாலேயே குறித்த இரட்டை கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மூன்று சந்தேகநபர்களும் இன்று (01) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரயந்த அமரசிங்க தலைமையிலான விசேட பிரிவுகளும் , மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சேந்தன் தலைமையிலான அணிகளும் தீவிரமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி இருவரது உடலங்கள் நேற்று முன்தினம் (30) மீட்கப்பட்டன.

குறித்த இருவரும் கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் மூவரை பருத்தித்துறை பொலிஸார் தடுத்து வைத்து அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றன.

கொலை செய்யப்பட்டவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் 53 வயதுடைய மாணிக்கம் சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவியான 54 வயதுடைய சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.

அவர்களின் வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை அயலவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

அச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பசிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான பருத்தித்துறை பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் என பல குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் தலைமையில் மூவரிடம் தொடர் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது.

இவர்களில் ஒருவர் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் 28.10.2018 அன்று இடம் பெற்ற இரட்டை கொலை, மற்றும் அவரது மனைவியின் தாயாரையம் கொலை செய்ய முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதுவரை யாரும் உத்தியோக பூர்வமாக கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version